தலைவர் 170 : ரஜினி “கெட்டப்”.. மீண்டும் அண்ணாமலையை கண்ணுக்கு முன் கொண்டு வந்த புகைப்படம்

Rajini 170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 600 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் ரஜினி அடுத்தடுத்த படங்களை புக் பண்ணி வருகிறார் தலைவர் 170 வது திரைப்படத்தை டிஜே ஞானவேல் இயக்க உள்ளார்.

இவர் இதற்கு முன்பு சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்னும் வெற்றி படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அடுத்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து தலைவர் 171-வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு முன்பாக ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாயாக ஒரு கேமியோ நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று படங்களும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில்  தலைவர் 170 தான் ஏனென்றால் டி ஜே ஞானவேல் எடுக்கும் படங்கள் அனைத்துமே சமூக அக்கறை கலந்த படங்களாக இருக்கும் அதனால் ரஜினியின் 170 படம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்  தலைவர் 170 படத்தில் நடிக்கயுள்ள நடிகர், யார் என்பதை அதிகாரப்பூர்வமாக சொல்லி வருகிறது. ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், அமிதாப் பச்சன்  போன்றவர்கள் நடிக்க உள்ளனர் அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரிக்க இருக்கிறது.

தலைவர் 170 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் முழு லிஸ்டையும் வெளியிட்ட நிலையில் படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்  அண்ணாமலை படத்தில் வரும் ரஜினி போல இருக்கிறார். இதுதான் படத்தின் கெட்டப்பா எனக் கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.