களத்துல சிங்கம் நாங்க தான்..லியோ நாளைக்கு தான் ரிலீஸ்.. சற்றுமுன் வெளியாகி வைரலாகும் விஜயின் வீடியோ.!

leo vijay video : நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத்தான் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய், கௌதம் வாசுதேவ் மேனன் மிஸ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளார்கள்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது நாளை அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு காரணம் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்கிரம் ஆகிய  திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பிரபலங்களிடையேவும் காணப்படுகிறது.

Leo : முதல் நாள் முதல் காட்சி உலக அளவில் வெளியாகும் நேரம்.!

இந்த நிலையில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை ஈட்டும் என பலரும் கூறி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் கிடையாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள். மேலும் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்த நிலையில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது லியோ.

அப்படி இருக்கும் நிலையில் ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிட பல மாட்டாது என திடீரென போர்டு வைத்துள்ளார்கள் இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜயின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Leo : முதல் நாள் முதல் காட்சி உலக அளவில் வெளியாகும் நேரம்.!

அந்த வீடியோவில் விஜய் ஏரோ பிளானில் இருந்து இறங்கி வருகிறார் இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் சில ரசிகர்கள் நாளை தான் லியோ இன்று விஜயின் வீடியோ தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.