Leo : முதல் நாள் முதல் காட்சி உலக அளவில் வெளியாகும் நேரம்.!

Leo : தளபதி விஜய் வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்து உள்ளார். அந்த வகையில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக வந்து இருக்கிறது.

வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அதாவது நாளை கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிக்பாஸ் ஜனனி, ப்ரியா ஆனந்த் என மிகப்பெரிய திரை பட்டாளமே நடித்து உள்ளது.

சென்னையில் முக்கிய திரையரங்கில் லியோ படம் ரிலீஸ் இல்லை.. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி

படத்தின் டிரைலர் வெளிவந்து மிரட்டியின் நிலையில் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது படம் நாளை ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் டிக்கெட் புக்கிங் ஜோராக போய்க் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மட்டுமே பல கோடி வசூல் செய்திருக்கிறதாம். லியோ படம் வெளிவந்து நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என பலரும் அடித்து கூறி வருகின்றனர்.

இப்படி லியோ படத்திற்கு அனைத்தும் பாசிட்டிவாக இருந்தாலும் ஒரு சில சிக்கல்களும் இருந்துள்ளது அதாவது லியோ படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை காட்சி கிடையாது முதல் காட்சியை காலை 9 மணிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் காலை 9 மணிக்கு மற்ற இடங்களில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

லியோ படம் எப்படி இருக்கு.. பார்த்துவிட்டு ட்வீட் போட்ட உதயநிதி.! சோகத்தில் இயக்குனர் லோகேஷ்

லியோ திரைப்படம் எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தமிழகத்தில் காலை – 9 மணி,  புதுச்சேரியில் காலை – 7 மணி, ஆந்திரா அதிகாலை – 5 மணி, கேரளா – 4 மணி, கர்நாடகா – 4 மணி, வட இந்தியா அதிகாலை – 4 மணி, வெளிநாடுகளில் – 4 மணிக்கு IST வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

Leo Vijay
Leo Vijay