“லியோ” ட்ரெய்லரை தொடர்ந்து மிரட்டும் ஹரால்டு தாஸ் புகைப்படம்.! குஷியில் ரசிகர்கள்

Harold Das : இணையதளத்தில் வைரலாகும் ஹரால்டு தாஸ் படம் :  லோகேஷ் கனகராஜ் எடுக்கும் ஒவ்வொரு படமும் வெற்றி படமாக மாறுகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய் வைத்து லியோ திரைப்படத்தை எடுத்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என பலர் நடித்துள்ளனர் படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லரும் வெளிவந்து மிரட்டி விட்டு போனது ட்ரெய்லரில் அதிகம் ஆக்சன் தென்படுகிறது.

ஒருவருடைய சோகத்தை கிண்டல் பண்ணி பேசியது கண்டனத்துக்கு உள்ளானது.! விஜய்க்கு STRIKE கொடுத்த காரணத்தை சொன்ன கமல்..

அதேசமயம் சில சென்டிமென்ட் சீன்களும் இடம்பெற்றுள்ளன. டைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது டிரைலரை பார்த்த பலரும் நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். படம் வெளிவர இன்னும் சில தினங்களில் இருப்பதால் பட குழுவும் போஸ்ட ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் லியோ திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதாவது திரைப்படத்தில்   விஜய் ஓகே சொன்னால் லியோ 2 உருவாகும் என கூறினார். மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அழகாக பதில் அளித்துள்ளார்.

IND VS AUS : இந்த 11 பேர் போங்க ஆஸ்திரேலிய அணியை ஈஸியா அடிக்கலாம்..! ஆடும் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

படத்திற்கு அனைத்தும் பாசிட்டிவாக இருந்தாலும் முதல் நாள் அதிகாலை ஷோ இல்லை என்பதால் படகுழு அக்டோபர் 18ஆம் தேதியே இரவு படத்தை ரிலீஸ் செய்ய வேலை பார்த்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களையும் குஷிப்படுத்தும் வகையில் ட்ரெய்லரை  தொடர்ந்து ஹரால்டு தாஸ் HD புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்