ஒருவருடைய சோகத்தை கிண்டல் பண்ணி பேசியது கண்டனத்துக்கு உள்ளானது.! விஜய்க்கு STRIKE கொடுத்த காரணத்தை சொன்ன கமல்..

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வருடம்தோறும் ஒளிபரப்பாகி வருகின்றன. தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போல தமிழிலும் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது சென்ற வாரத்தில் இருந்து  7-வது சீசனையும் கோலாகலமாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலஹாசன் பலகோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..  18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 7 சீசனின் முதல் வாரத்திலேயே சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றன..

லியோ படத்தில் வையாபுரி..! இந்த வாய்ப்புக்கு அவர் பட்ட பாடு இருக்கே.. வைரல் செய்தி

விசித்ரா ஜோவிகாவிடம் படிப்பு ரொம்ப முக்கியம், அட்லீஸ்ட் பத்தாவது, 12 வது வரையும் ஆவது முடிச்சிருக்கணும் நீ என்று சாதாரணமாக சொல்ல.. அதை பெரிய பிரச்சினையாகி ஜோவிகா என்னோட படிப்ப பத்தி பேச நீங்க யாரு எனக்கு படிப்பு வரல அதனால நான் நிறுத்திட்டேன் என ஆக்ரோஷமாக கோபப்பட்டு உள்ளார்..

இன்னொரு பக்கம் விஜய் பிரதீப்பை பார்த்து நீ என் மேல ஷூ இடிச்சிட்டு சாரி சொல்லாம போன பதிலுக்கு நானும் உன்னை அடிச்சா மூஞ்சி உடைஞ்சிக்கும், வெளியே என் மேல பாசக்கார பசங்க நிறைய பேர் இருக்காங்க உன்ன செஞ்சுருவாங்க என்றும் மிரட்டினார் ஆனால் பிரதீப் இதற்கு பெரிதாக கோபப்படவில்லை..

இதையெல்லாம் வைத்து இறுதி எபிசோடில் கமல் என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் விசித்ரா மற்றும் ஜோவிகா பிரச்சனையில் இரண்டு பேருடைய கருத்துமே தனிப்பட்ட முறையில் சரிதான் என்று சமரசம் பேசியுள்ளார் ஆனால் விஜய் மற்றும் பிரதீப் பிரச்சனையில் விஜய் இடம் நீ இப்படி பேசியது விதிமுறைக்கு அப்பாற்பட்டது.

அமிர்தாவை நேருக்கு நேராக பார்த்து கணேசன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் அப்பா, அம்மா.. பாக்கியலட்சுமி பரபரப்பான ப்ரோமோ

அதனால் உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என இன்றைய எபிசோடில் விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுக்க இருக்கிறார், இந்நிலையில் இன்றைய எபிசோடின் அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் மாயா விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்கிறது சரியான முடிவு.

ஆனால் இந்த வீட்டில் ரெண்டு பேர் அதுபோல் நடந்து இருக்காங்க என்று சொல்கிறார், பிறகு கமல் விஜயிடம் ஒருத்தருடைய சோகத்தை கிண்டல் அடித்து நீங்கள் பேசி இருக்கிறீர்கள் ஆனால் அது என்னவென்று நான் சொல்ல மாட்டேன், அந்த அளவிற்கு கண்டனத்திற்குரிய விஷயம் அது, உங்களுக்கும் உங்க கூட சேர்ந்து சிரித்தவங்களுக்கும் புரிந்தால் போதும் என்று சொல்கிறார்..