மலையாள சினிமாவில் நடித்து பின் தமிழ் பக்கம் வந்தவர் லக்ஷ்மிமேனன். முதலில் இவர் சசிகுமாருடன் கைகோர்த்து சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது படமான கும்கி திரைப்படமும் அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதனால் பட வாய்ப்புகலும் குவிகின்றன இருப்பினும் தான் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதுபோல கூறி கரெக்டாக சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதனால் அவரது படங்கள் ஒவ்வொன்றும் மிக பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தின. இதனால் டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
லக்ஷ்மி மேனன் இன்னும் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தினார் அந்த வகையில் விஷாலுடன் சிகப்பு மனிதன், விஜய்சேதுபதியுடன் றெக்க படமும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்துடன் இணைந்து வேதாளம் திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அசத்தினார்.
அதன்பின் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தாலும் ஒரு கட்டத்தில் மேற்படிப்பு படிக்க சென்றார். ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமா உலகில் தற்போது நடிக்க வந்துள்ளார் அந்த வகையில் இவருக்கு புலிகுட்டி பாண்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.
அதை தொடர்ந்து தற்போது சோலோவாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் அதற்கேற்றார் போல கேஜிபி என்ற படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
