கும்கி படத்தில் உண்டியலாக நடித்தவர் இந்த பிரபல நடிகரின் மகனா.! வைரலாகும் புகைப்படம்

Ashvin Raja: கும்கி படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் அஸ்வின் யாருடைய மகன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குண்டாக இருந்ததால் காமெடியின் மூலம் சில படங்களிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் அஸ்வின் 2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க லக்ஷ்மி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உண்டியல் என்ற கேரக்டரில் நடித்த அஸ்வின் ராஜா இதன் மூலம் பிரபலமானதால் தொடர்ந்து பட  வாய்ப்புகளை பெற்றவர்.

காலியான திரையரங்கம்.. OTT தளத்திற்கு தாவிய கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. எப்போ ரிலீஸ்.?

அப்படி பாஸ் என்ற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அஸ்வின் ராஜா யாருடைய மகன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார். இந்த தயாரிப்பு நிறுவனத்தில் கே. முரளிதரன் ஜி. ரேணுகோபால் ஆகியவர்களும் பாட்னர்கள்.

ashvin raja father
ashvin raja father

அப்படி இந்த நிறுவனத்தின் சார்பில் 1999ஆம் ஆண்டு கோகுலத்தில் சீதை பிறகு உன்னிடத்தில் என்னை கண்டேன் உள்ளிட்ட படங்களை தயாரித்தனர். வி சுவாமிநாதன் எப்பொழுதும் இந்த படங்களில் கேமியோ ரோலில் நடிப்பது உண்டு. அப்படி பஸ்ஸில் வடிவேலு இது உங்கள் சொத்து என எழுதப்பட்டு இருப்பதை படித்துக் காண்பிப்பார்.

மாயா, பூர்ணிமா இருவரும் டம்மி பீசு.! அவருடைய கேரக்டரை உடைத்ததே நான் தான்..

அப்பொழுது கடுப்பான கண்டக்டர் மீண்டும் வடிவேலுவை அடித்து வடிவேலுவை படிக்க சொல்லுவார் இந்த கேரக்டரில் நடித்த சுவாமிநாதன் தான் அஸ்வின் ராஜாவின் தந்தை. 24க்கு மேலாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் இந்த நிறுவனத்தின் அன்பே சிவம் படத்தினை தயாரித்தவர் சுவாமிநாதன்.

ashvin raja father
ashvin raja father

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். இந்த சூழலில் சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா தனது தோழி வித்யாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர் மருத்துவராக பயிற்சி பெற்று வருகிறாராம்.