சென்னையில் பிரபல திரையரங்கில் வாரிசு திரைப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ்.! இதோ வெளியாகிய ஆதாரம்..

keerthi-suresh

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது.  மேலும் வாரிசு திரைப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம்,  ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ்,  என பல  நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இன்று திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ஆவலுடன் படத்தை கண்டு களித்து வருகிறார்கள்.தளபதி விஜய் அவர்களுக்கு ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகர் மற்றும் ரசிகைகளாக இருக்கிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விஜய்யின் தீவிர ரசிகை.

இது அனைவருக்கும் தெரிந்த தகவல் தான் இவர் விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள வாரிசு திரைப்படத்தை  கீர்த்தி சுரேஷ் முதல் ஷோ முதல் காட்சியாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கில் பார்த்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் வாரிசு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று சென்னைக்கு வந்துள்ளாராம் எங்கு போனாலும் பொங்கலுக்கு சென்னைக்கு வந்து தான் ஆக வேண்டும் என திரையரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று இருந்தார் அப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கவே தற்பொழுது சென்னைக்கு வந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கியுள்ளது. அதனால் இந்த திரைப்படத்தை பொதுமக்களும் கண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

varisu
varisu