கண்ணா லட்டு தின்ன ஆசையா திரை படத்தில் நடித்த நடிகர் மரணம்.! அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்.

santhanam

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் சந்தானத்துடன் நடித்த  டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் சேதுராமன் இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி படித்துள்ளார், தோல் சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார், இவர் யூடியூப் சேனலில் தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு ஏராளமான தீர்வுகளை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரில் தோல் நோய்க்கு லேசர் சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்கும் விதமாக பயிற்சியை கற்றுள்ளார், இவர் சில வருடத்திற்கு முன்பு நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் வாலிப ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார், சேதுராமன் 2016ம் ஆண்டு காரைக்குடியை சேர்ந்த இன்ஜினியரிங் படித்த உமையாளை திருமணம் செய்துகொண்டார்.

சென்னையில் லீலா பேலஸ் அருகே இவரது வீடு அமைந்துள்ளது தற்பொழுது வயது இவருக்கு 34 தான் காலையில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை திரைபிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது மேலும் பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

sethuraman
sethuraman