தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் தற்பொழுது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.. இவர் கடைசியாக கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்த பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்ப்பை எகிற விட்டார் சூர்யா.
சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார் ஜோதிகாவும் ஒரு நடிகை தான் இவர் அஜித் நடிப்பில் வெளியாகிய வாலி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஜோதிகா ஒரு காலகட்டத்தில் சூர்யா மீது காதல் ஏற்பட்டது.
அந்த காதல் திருமணத்தில் முடிந்தது தற்பொழுது வரை சூர்யா மற்றும் ஜோதிகா மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய கணவர் சூர்யா ஜிம் ஒர்க் அவுட் மிஞ்சும் அளவிற்கு தானும் கடுமையாக ஒர்க்அவுட் செய்து அதன் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் ஜோதிகா. இந்த வீடியோ ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.
தற்பொழுது ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் முதல் தோற்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு 36 வயதிலேயே, நாச்சியார், மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட் ,தம்பி, பொன்மகள் வந்தால், உடன்பிறப்பே என பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்