இரண்டு ஓடிடி தளங்களில் இன்று வெளியாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.!

Jigarthanda DoubleX: இந்த ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அப்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் இந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்தவர்.

கமலின் 25, 50, 75, 100 வது படம் வெற்றியா.? படத்தின் பெயர் என்ன தெரியுமா.?

இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அந்த வகையில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் உலக அளவில் ரூபாய் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்பொழுது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் இரண்டு ஓடிடி தளங்களில் இன்று வெளியாக உள்ளது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் இந்தியாவிற்கு வெளியே உள்ள ரசிகர்கள் சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதிகா கேட்ட கேள்வி ஆடி போன பழனிச்சாமி.. பாக்கியா சொன்ன பதில்.. பாக்கியலட்சுமி பரபரப்பான எபிசோட்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியான நிலையில் இதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் அமோக வெற்றியினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.