கொரோனா நிதி உதவி கொடுத்த ஜெயம் ரவி.! பின் பத்திரிக்கையாளருக்கு வச்ச செம்ம ட்விஸ்ட்.?

jeyam-ravi
jeyam-ravi

கொரோனா தொற்று முதல் கட்ட அலை பேரழிவை கொடுத்த நிலையில் தற்போது அதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது இரண்டாம் கட்ட அலை இதை தடுக்க மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்கள் தனது அசாதாரணமான பணியை செய்து வந்தாலும் இதை வெற்றிகரமாக தடுக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டில் இருக்க வேண்டியது அவசியம்.

அதனை மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழுப்புணர்வு ஆகவும் சொல்லி வருகின்றனர். ஆனால் ஒரு பக்கம் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். தற்போது இருக்கும் சூழல் சரி இல்லாதால் நிதி நெருக்கடியை மிகப்பெரிய அளவில் சந்திக்கும் என்பதால் தன்னால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பலரும் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவி தற்போது தன்னால் முடிந்த காசோலையை கொடுத்து உள்ளார் ஆனால் எவ்வளவு கொடுத்தோம் என்பதை மட்டும் இப்போ வரையிலும் வெளிப்படையாக சொல்லவில்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி கொரோனா நிதி உதவிக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார் அதன் பிறகு வெளிவந்த ஜெயம் ரவி பத்திரிகையாளர்களிடம் இது மிகவும் கடினமான தருணம் எல்லோரும் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

வெளியே வந்து பத்திரிக்கையாளர்கள் நீங்கள் முதலமைச்சரை சந்தித்து எவ்வளவு அமௌன்ட் கொடுத்தீர்கள் என கேட்டதற்கு அமௌன்ட் கொடுத்த சொல்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல என்னால எவ்வளவு முடியுமோ அதைக் கொடுத்து இருக்கிறேன் என்று சிரித்த முகத்துடன் கூறி அங்கிருந்து வெளியேறினார்.