தனுஷ் கேல் பிரண்டுடன் ஜெயம் ரவி.! வைரலாகும் புகைப்படம்

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகள் ஜெயம் ரவிக்கு குவிந்து வருகிறது. அப்படி கமல்-மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் ஜெயம் ரவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து மிரட்டிய ஜெயம் ரவிக்கு இப்படம், கேரக்டர் அனைத்தும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நிற்க கூட நேரமில்லாமல் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

விஜய்க்கு ஜோடியா நடிக்க வைப்பாங்கன்னு பார்த்தா இப்படி தங்கச்சின்னு சொல்லிட்டாங்களே..! குமுறும் இளம் நடிகை.!

அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான அகிலன், இறைவன் போன்ற படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்பொழுது ஜெயம் ரவி எம். ராஜேஷ் இயக்கம் பிரதர்ஸ், சைரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாக இருக்கும் தக் லைஃப் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

kadhalikka neramillai
kadhalikka neramillai

மேலும் ஐஜரி கணேஷ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜீனி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இவர் விரைவில் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கிருத்திகா உதயநிதி இயக்கம் இருக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட்டை ரெட் ஜெயன்ட் மூவிஸ் அறிவித்துள்ளது.

விஜய்க்கு ஜோடியா நடிக்க வைப்பாங்கன்னு பார்த்தா இப்படி தங்கச்சின்னு சொல்லிட்டாங்களே..! குமுறும் இளம் நடிகை.!

இந்த படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என டைட்டில் வைக்கப்பட்ட ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தற்பொழுது வெளியான காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் ரொமான்டிக்கான போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, லால், வினை, ஜான் கொக்கன் ஆகியோர்கள் நடிக்க உள்ளனர்.