நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பரான படங்களில் நடித்த அசத்தி வருகிறார் முதலில் இவர் ஜெயம் படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு இவர் ஆக்சன் காதல் என தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்த தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஜெயம் ரவி கையில் தற்போது பொன்னியின் செல்வன், அகிலன், இறைவன் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படங்கள் ஹிட் கொடுக்கும் பட்சத்தில் ஜெயம் ரவி சினிமா பயணம் புதிய உச்சத்தை தொடும் என தெரிய வருகிறது
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது அக்காவுடன் கலந்து கொண்டார் அப்பொழுது இருவரிடமும் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது ஜெயம் ரவி அக்கா சொன்னது. ஜெயம் ரவி நடிப்பதையும் தாண்டி சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்

நிறைய படங்கள் பார்க்கிறார் அதிலிருந்து சில நுணுக்கமான குறிப்புகளை சேகரித்து வைத்துள்ளார் அவரிடம் நிறைய கதைகள் இருக்கிறது வெகு விரைவிலேயே அவர் இயக்குனரா அவதாரம் எடுப்பார் என கூறினார். இதற்கு ஜெயம் ரவி பதிலளித்தது நான் இயக்குனராக அவதாரம் எடுக்க சில காலங்கள் ஆகும் என்றார் ஏன் என கேட்டதற்கு எனது அக்கா மகள் தற்பொழுது படித்து கொண்டிருக்கிறார்.
அவர் எப்பொழுது டாக்டராக ஆகிறாரோ அப்பொழுது தான் நான் இயக்குனர் அவதாரம் எடுப்பேன் என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அவரது அக்கா எனது மகள் இன்னும் இரண்டு வருடத்தில் டாக்டர் ஆகிவிடுவார் எனக் கூற அப்ப நானும் இயக்குனராகி விடுகிறேன் என கூறியுள்ளார்.