ஜெயம் ரவி சார் உங்க உடம்பு எப்படி விரிந்து கிடக்குதோ.. அது போல தான் உங்க வீடும்.. பார்ப்பதற்கு பெருசாக இருக்கிறது.! புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.

jeyam-ravi

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி மேல் வெற்றியை கொடுத்தது சிறப்பாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம்ரவி ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ஒட்டுமொத்த ஆண் மற்றும் பெண் ரசிகர்களைக் கவர்ந்து வந்த ஜெயம் ரவி போகப்போக ஆக்ஷன் படங்களிலும் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

அதிலும் இவரது படங்கள் நல்ல வசூலை பார்த்தன மேலும் நல்ல பெயரும் கிடைத்தன. அந்த காரணத்தினால் அதற்காக தனது உடம்பை பல மடங்கு மாற்றிக்கொண்டு தற்போது ஆக்ஷன் மற்றும் காதல் சம்பந்தப்பட்ட படங்களை கையில் எடுத்துக்கொண்டு வருகிறார்.

நடிகர் ஜெயம் ரவி தற்போது மக்களின் ஆசை இயக்குனரான மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் ஜெயம் ரவி.

jeyam-ravi
jeyam-ravi

மக்கள் மத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இப்படியே போனால் தனது சம்பளத்தை மிகப்பெரிய உயர்த்தி கொண்டு மற்ற டாப் நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமிபகாலமாக பல பிரபலங்கள் வாழ்ந்து வரும் நட்சத்திர வீடுகளின் புகைப்படங்கள் அபூர்வ போது இணையதள பக்கத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

jeyam-ravi

அதுபோல தற்போது நடிகர் ஜெயம் ரவி  வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படமும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நீங்க எப்படியோ அதுபோல தான் உங்கள் வீடும் நல்ல பெருசா விரிஞ்சி இருக்கிறது என்று கூறி கமெண்ட் அடிக்கும் வருகின்றனர் ரசிகர்கள்.

jeyam-ravi
jeyam-ravi