கடந்த ஆண்டு வெளிவந்த சார் பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டியெங்கம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை துஷாரா விஜயன். தற்பொழுது நடிகை துஷாரா விஜயன் அப்பாவுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான துஷாரா விஜயன் கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலைராஜன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது மேலும் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் துஷாரா விஜயன். இந்த திரைப்படத்திற்கு முன்புவரை இவரை பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் பிறகு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பலரும் இந்தத் திரைப்படம் தான் இவருடைய முதல் படம் என நினைத்து வருகிறார்கள் ஆனால் இதற்கு முன்பே இவர் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார் மேலும் இவர் சிறந்த நடன கலைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் இவருடைய அப்பா பற்றிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது இவருடைய தந்தை திண்டுக்கல் திமுகவில் மிகவும் முக்கியமான நபராக இருந்து வருகிறார் மேலும் சாணார்பட்டி விஜயன் என்றால் திண்டுக்கல் திமுகவில் தெரியாதவர்களை கிடையாதாம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு சாணார்பட்டி விஜயன் தோற்றுள்ளார்.
இருந்தாலும் இவர் சாணார்பட்டி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார் அமைச்சர் ஐ பெரியசாமியின் நெருக்கத்திற்குரிய நபர்களில் ஒருவராக இவர் இருந்து வருகிறார் மேலும் இவர் கடந்த பத்து வருடங்களாக திமுக கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.