ஏகே 62 இருந்து விக்னேஷ் சிவனை நீக்கியதற்கு இதுதான் காரணமா.? பத்திரிக்கையாளர் ஒரே போடு..

ak62
ak62

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஹெச் வினோத் உடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விடுமுறை நாட்களில் துணிவு திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது அந்த அளவிற்கு விடுமுறை நாட்களில் கூட்டம் சேர்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62  திரைப்படத்திற்காக பிசியாக இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் சில மாதங்களாக வெளியாகி கொண்டே இருந்தது இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாகவே ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கும் லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்திற்கும் திருப்தி அளிக்காததால் கதையில் சில மாற்றங்கள் வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆனால் 8 மாதங்கள் கால அவகாசங்கள் இருந்தும் கதையில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் இருந்து வந்தாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இதனால்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்று பிஸ்மி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என்றும் விக்னேஷ் சிவனின் ஒரு புது முயற்சி தான் ஏகே 62 என்ற தகவலும் வெளியான உடனே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ஆனால் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள் என்று கூறியதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தை யாருதான் இயக்கப் போகிறார் என்று பல கேள்வியும் தற்போது நிலவி வருகிறது அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை  தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.