கயல் ஆனந்தியின் உண்மையான பெயர் இதுவா.? பிரபல இயக்குனர் தான் பெயரை மாற்றினாரா.? நடிகையே கூறிய சுவாரசியமான தகவல்

kayal-ananthi
kayal-ananthi

தெலுங்கு சினிமாவின் மூலம் அடி எடுத்து வைத்து பின் தமிழில் தனக்கென ஒரு மிகப்பெரிய  ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை கயல் ஆனந்தி.

ஆள் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல இருந்ததால் அதுபோன்ற கிராமத்து சப்ஜெக்ட் உடைய படங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்ததால் இளசுகளை வெகுவாக கவர்ந்து இழுத்தார் இவர் தமிழில் பொறியாளன், கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு போன்ற அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களில் நடித்து தனது பெயரை நிலை நிறுத்திக் கொண்டார்.

2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்திலும் இவரது நடிப்பு உச்சத்தில் இருந்தது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த கயல் ஆனந்தி. திடீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் அதன் பிறகும் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கயல் ஆனந்தி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அப்பொழுது தன்னுடைய பெயர் குறித்தும் அவர் பேசி உள்ளார். அவர் கூறுகையில் தன்னுடைய உண்மையான பெயர் ஆனந்தி இல்லை நிஜப்பெயர் ரஷிதா என்றும் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் தான் தன் பெயரை ஆனந்தி என மாற்றி விட்டதாகவும் அவர் கூறினார்.

இச்செய்தி தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வேகம் எடுத்துள்ளது.