ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற பட்டத்தை பெற்ற பின் இவருக்கு சினிமா உலகில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஹிந்தியும் அதிகம் கவனம் செலுத்தி இருந்தாலும் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது.
அந்த வகையில் தமிழில் இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரஜினியின் எந்திரன், விக்ரமின் ராவணன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தார் ஐஸ்வர்யாராய்.
தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தை ஒன்று இருக்கிறது இப்போவும் சினிமாவில் நடித்து வருகிறார் பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார் இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் மணிரத்தினம் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஏற்கனவே பல டாப் நடிகர்கள் இணைந்து நிலையில் ஐஸ்வர்யாராயும் இந்த படத்தில் இணைந்து உள்ளதால் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சேதுபதி, மாரி 2, ரெக்க உள்ளிட்ட படங்களில் நடித்த சின்ன பையன் ராகவன் முருகன் பொன்னியின் செல்வன் படத்திலும் இணைந்துள்ளார்.
இவர் படத்தின் ஷூட்டிங்கின் போது ஐஸ்வர்யாராயுடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் அவருடைய கேரக்டர் பற்றியும் தற்போது சொல்லி உள்ளார்.

ஐஸ்வர்யாராய் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அவர் பாண்டிய இளவரசியாக இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.