நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இருந்த படம் தான் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படமாக வெளியானது. எனவே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் படங்கள் இயக்காமல் விலகினார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் கம்பேக் கொடுக்கப் போகிறார் இது பற்றிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகரான அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஏ.ஆர் முருகதாஸ். பிறகு தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். மேலும் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தார் ஏ.ஆர் முருகதாஸ்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிகர் விஜயின் 65வது படத்தை இயக்க கமிட்டாகி இருந்த நிலையில் சன் பிரிக்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் ஏ.ஆர் முருகதாஸுக்கு பதிலாக விஜயுவுடன் நெல்சன் திலிப்குமார் இணைய அது பீஸ்ட் படமாக உருவானது. பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு கதை சொன்ன ஏ.ஆர் முருகதாஸுக்கு படங்கள் எதுவும் அமையவில்லை.
இதனால் பொறுமையாக இருந்து வந்த இவர் தற்பொழுது தரமான கதை அம்சமுள்ள படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த படத்தினை phantom எனும் VFX கம்பெனியின் தயாரிப்பில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இயக்க முடிவு செய்துள்ளாராம் ஏ.ஆர் முருகதாஸ்.

அதற்கான பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார் நிலையில் தற்போது புதிதாக முதன் முறையாக நடிகர் சிம்புவுடன் இணைந்து இந்த அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் படம் உருவாக இருக்கிறதாம்.
அந்த வகையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ள நிலையில் தற்போது சிம்புவின் மார்க்கெட் சூட பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.