மீண்டும் சேர்ந்த ஜோடி.. அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அருண் விஜய்யா.? அவரே சொன்ன தகவல்

Ajith : சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் ஈசியாக நுழைந்து விடுகிறார்கள் ஆனால் தன்னை  தக்க வைத்துக் கொள்ள ரொம்பவே போராடுகிறார்கள் அவர்களில் ஒருவர் அருண் விஜய். இளம் வயதிலேயே ஹீரோவாக அறிமுகமானார் முன் அனுபவம் இல்லாததால் சரியான கதைகளை தேர்வு செய்யாமல் நடித்ததால்..

தொடர்ந்து தோல்விய படங்களை கொடுத்து ஆள் அடையாளமே தெரியாமல் போனார். தோல்வியிலிருந்து மீண்டு வர அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து என்ட்ரி கொடுத்தார் அந்த படம் பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது.

ராமராஜன் இயக்குனராக ஹிட் கொடுத்த படங்கள் இத்தனையா.? லிஸ்ட் பெருசா போகுது

அதன் பிறகு தடம், குற்றம் 23 போன்ற படங்கள் அருண் விஜய்க்கு மேலும் வெற்றியை தேடி தந்தன அதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். குறிப்பாக வணங்கான் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் அருண் விஜய் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு காரணம் அருண் விஜயின் அடுத்த படங்களில் லிஸ்ட் கூகுளில் தேடினால் அந்த மூவி லிஸ்டில் விடாமுயற்சி படம் வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்கும் பொழுது இது உண்மையா.? நீங்கள் நடிக்கிறீர்களா.? என கேட்டுள்ளனர்.

விஜயகாந்த் மறைவிற்கே போகல.. கலைஞர் 100 விழாக்கு போன அவ்வளவுதான் என வர மறுத்த நடிகர்கள்..!

அதற்கு நடிகர் அருண் விஜய் அது எனக்கே தெரியாது ஆனால் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் நீங்கள் நடிக்காதது எங்களுக்கு சற்று ஏமாற்றம் தான் ஆனால் அடுத்த அஜித் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.