இந்தியா படுதோல்வி.. ரஜினியின் வாய் முகூர்த்தம் – வம்பு இழுக்கும் சினிமா பிரபலம்.!

Rajini : 13 வது உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது இதில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றியை பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்தது. நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பௌலங்கை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து ரோகித் சர்மா மற்றும் சுமன் கில் களம் இறங்கினர் ஆரம்பத்தில் இருந்து ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் குவித்தார் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் அடித்தார் கே எல் ராகுல் சுமாராக விளையாண்டு அரை சதம் அடித்தார்.

வெளிநாட்டில் வசூலில் சக்க போடு போட்ட 5 திரைப்படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

இவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார் இதனால் 240 ரன்கள் அவுட் ஆனது இதனை எடுத்து ஆஸ்திரேலியா அணி களம்பிறங்கியது துவக்கத்தில் இருந்து அதிரடியை காட்டினாலும் விக்கெட் விழுந்தது இருந்தாலும் ஹெட் மற்றும் லெபிச்சானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி அடைய வைத்தனர்.

ரோஹித் சர்மா பேசியது.. காரணங்களை சொல்லி மழுப்ப விரும்பவில்லை எங்களை விட ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது என  தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்தை கலாய்த்து உள்ளார். உலக கோப்பை அரையறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா போட்டி  நடத்தது. இந்த போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சென்னை திரும்பினார்.

சொந்த மகனுக்கே உதவி பண்ண யோசிக்கும் விஜயா.. விட்டுக் கொடுக்காத அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

அப்பொழுது ரஜினிகாந்திடம் இந்த முறை உலக கோப்பையை இந்திய அணி வெல்லுமா என கேட்டதற்கு ரஜினி 100 சதவீதம் கப் நமக்கு தான் என்று கூறியிருந்தனர் அதனை மேற்கோள் காட்டி ப்ளூ சட்டை மாறன் தனது twitter பக்கத்தில் தலீவரின் வாய் முகூர்த்தம் என கலாய்த்து உள்ளார் இந்த ட்வீட் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.