2024-ல் இந்த 5 நடிகர்களின் திரைப்படங்கள் 600 கோடிக்கு மேல் வசூல் செய்யும்.. களத்தில் இறங்கும் அஜித்

Tamil Movies: இந்த ஆண்டு சினிமாவிற்கு பொன் காலமாகவே பார்க்கப்படுகிறது ஏனென்றால் சின்ன பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அப்படி ஏராளமான முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வந்தனர்.

முக்கியமாக விஜய்யின் லியோ மற்றும் ரஜினியின் ஜெயிலர் ஆகிய இரு திரைப்படங்களும் தான் இந்த ஆண்டு வசூலில் சாதனை படைத்த தமிழ் திரைப்படங்கள். லியோ திரைப்படம் ரூ.598 கோடி வரை வசூல் செய்தது அதேபோல் ரஜினியின் ஜெயிலர் ரூ. 635 கோடி வரை வசூல் செய்தது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரம்.. 80 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இவ்வாறு இந்த வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ரஜினியும் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் அடுத்த ஆண்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து பேசிவுள்ளார். அதில் அடுத்த ஆண்டு 5 திரைப்படங்கள் ரூ.600 கோடி வரை வசூல் செய்ய உள்ளது. ரஜினியின் வேட்டையன், விஜய்யின் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி, கமலின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய திரைப்படங்கள் ரூ.600 கோடி வசூலை தொடும் எனக் கூறியுள்ளார்.

விஜய் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம்.? அம்மாவால் நிறைவேறாமல் போன கனவு.. அவரே சொன்ன தகவல்

இந்த ஐந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் ஐந்து படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது கடைசியாக அஜித்தின் துணிவு திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் இந்த முறை விடாமுயற்சி கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.