இப்படியே போனா வேற கேப்டனுக்கு கீழ தான் நீங்க விளையாடனும்.! வெளுத்துவிட்ட சிஎஸ்கே தோனி…

dhoni
dhoni

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 வருடங்களுக்குப் பிறகு csk சிளையாடியதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். தோனி இதுதான் தன்னுடைய கடைசி ஐபிஎல் என ஏற்கனவே அறிவித்துவிட்டார் அதனால் தோனி மீதான அன்பும் அக்கறையும் ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது அதனால் அவர் விளையாட வரும் போட்டியை ரசிகர்கள் எண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.

டோனி டாஸ் போடும் பொழுது மைதானத்திற்கு வந்தது முதல் போட்டியை முடித்துவிட்டு வெளியே செல்லும் வரை தோனி தோனி என்ற சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது அந்தளவு ரசிகர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வந்தார்கள் சென்னை அணிமுதலில் பேட்டிங் செய்தது இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராட்ச் கேய்க் வாட்  கான்வெயின்  ஆகியோர் பந்துகளை அடித்து  பறக்க விட்டார்கள்.

முதல் விக்கெட் சென்றதும் தோனி தோனி என பலரும் கத்தினார்கள் ஆட்டம் இறுதிவரை சென்றது ஆனால் தோனி களமிறங்கவில்லை அதனால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருந்தார்கள் பின்பு கடைசி ஓவரில் முதல் பாலில் ஜடேஜா அவுட் ஆனதும் தோனி மைதானத்திற்குள் என்ட்ரி கொடுத்தார் அப்பொழுது மைதானமே கலை கட்டியது அந்த அளவு தோனியின் குரல் ஒலித்தது பின்பு தனக்கு வந்த முதல் பாலை சிக்ஸர் பறக்க விட்டார் அடுத்த பாளையம் சிக்ஸர் படுக்க விட்டார்.

மூன்றாவது பாலில் ஆறு அடிக்க முயன்று அவுட் ஆனார் ரசிகர்கள் டிக்கெட் எடுத்து தோனியை பார்க்க வந்தவர்களுக்கு மிகவும் பெரிய மகிழ்ச்சி என்று தான் கூற வேண்டும் அந்த அளவு தோனியை வரவேற்றார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் தோனி பவுலர்களை எச்சரித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பவுலர்கள் வைடு எக்ஸ்டரா ரன் கொடுத்ததால் தோனி ஆத்திரம் அடைந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இதுபோல் வைல்ட் எக்ஸ்டரா ரண் கொடுத்தால் வேறு கேப்டனுக்கு கீழ்தான் விளையாட வேண்டும் என அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது வேகப்பந்து பேச்சாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்துகளை வீச வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களுடைய முன்னேற்றத்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கடைப்பிடிக்க வேண்டும் பீல்டர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு பந்து வரும்படி வீச வேண்டும்.

எதிரணி போலர்கள் எப்படி வீசுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இந்த முறை அதிக வைட் நோ பால் வீசி உள்ளோம்  இது சரியானதாக இல்லை நோபால் கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்றால் புதிய கேப்டனுக்கு கீழ்தான் நீங்கள் விளையாட வேண்டும் நான் வெளியேறிடுவேன் என கடுமையாக எச்சரித்துள்ளார் தோனி.