துணிவை ஓட ஓட விரட்டுவேன் – அடித்து சொல்லும் தளபதி விஜய்.!

varisu
varisu

பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை ருசித்திதாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனால் கடுப்பான விஜய் ஆக்சன் படத்தை ஓரம் வைத்துவிட்டு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படத்தில்  கவனம் செலுத்தி உள்ளார். விஜயின் 66-வது திரைப்படமாக வாரிசு திரைப்படம்.

முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது இதில் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரரின் மகனாக விஜய் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். வாரிசு படம் வருகின்ற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாகே பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம் அந்த வகையில்  தெலுங்கில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என அங்கு போர் கொடி தூக்கினார்கள் ஒரு வழியாக அங்கு பிரச்சனை முடிந்தது அதனை தொடர்ந்து சின்ன சின்னபிரச்சனை எட்டி பர்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அதன் காரணமாக என்னவோ பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யாமல் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் விஜயின் மேலாளர் ஜெகதீஷ்என்பவரை தொடர்பு கொண்டு விஜய் ரசிகர்கள் வாரிசு படம் குறித்து கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ஜெகதீஷ்.. இங்கு நடக்கும் அனைத்தும் விஜய்க்கி தெரியும் கண்டிப்பாக வாரிசு படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

அது மட்டும் இன்றி வாரிசை நல்ல படமாகவும் நீண்ட காலமாக தியேட்டரில் ஓடும் படமாக அமையும் என விஜய் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது விஜய் வாரிசு படம்  முதல் நாள் கலெக்ஷன் அதிகமாக வர நினைக்கவில்லை ஆனால் வாரிசுப் படம் நிறைய நாட்கள் ஓடிய அதிக வசூலை படைக்கும் என நம்பிக்கையில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.