பார்த்திபன் நடிகராக தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அவருக்கு இயக்குனராக மாற வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக இருந்தது ஒரு கட்டத்தில் அந்த ஆசையையும் நிறைவேற்றினார் பார்த்திபன். புதிய பாதை என்ற திரைப்படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அதே படத்தில் நடிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின் பார்த்திபன் குடைக்குள் மழை, ஹவுஸ்புல், கோடிட்ட இடங்களை நிரப்புக என பல படங்களை இயக்கி வெற்றி கண்டார். இப்பொழுதும் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் அண்மையில் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7 என்னும் திரைப்படம் நேஷனல் ஃபிலிம் அவார்டு, ஸ்பெஷல் ஜூரி அவார்டு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பார்த்திபன் இரவின் நிழல் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது முதல் நாளில் மட்டுமே சுமார் 90 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவின் நிழல் திரைப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், சாய் பிரியங்கா ருத், பிரிகிடா சஹா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்தனர். இந்தப் படத்தில் ரேகா நாயரும் நடித்துள்ளார் இரவின் நிழல் படத்தில் ஒரு நிர்வாண காட்சியில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அது தற்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது அண்மையில் பேட்டி ஒன்றில் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.

அதற்காக அவர் சொன்னது நான் இந்த படத்தில் நிர்வாணமாக நடிக்கவில்லை மாறுதலாக அந்த கதாபாத்திரம் படி நான் பிணமாகத்தான் படுத்து கிடந்தேன் தவிர வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டார். நான் அந்த கதாபாத்திரத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்கிறேன் வேறு எதுவும் எனக்கு இதுவரை தோன்றியது கிடையாது என குறிப்பிட்டார்.