KGF 2 படத்தை மொத்தம் எத்தனை கோடி பேர் பார்த்து உள்ளனர் தெரியுமா.? வெளிவந்த தகவல்.!

YAASH
YAASH

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் கேஜிஎப் 2. இதற்கு முன்பாக இந்த கூட்டணி கேஜிஎஃப் எனும் முதல் பாகத்தில் பணியாற்றியது அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உடனே உருவாகியது.

ஆனால் படத்தின் ஷூட்டிங்கின்போது பல பிரச்சனைகளை சந்தித்ததால் இரண்டு வருடங்கள் கழித்துதான் இந்த படம் ரிலீஸானது. ஆனால் முதல் பாகத்தை விட இந்த படத்தில் மாஸ் சீன்கள் செண்டிமென்ட் ஆக்ஷன் என எல்லாமே அதிகமாக இருந்ததால் கே ஜி எஃப் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

குறிப்பாக தமிழகத்தில் இந்த படத்திற்கான மவுசு இன்று வரையிலும் குறையாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் மட்டுமே 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது இப்படி இருக்க ஒட்டுமொத்தமாக கேஜிஎப் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் மட்டுமே சுமார் 400 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பல்வேறு டாப் நடிகர்கள் படத்தினை முறியடித்துள்ளது கே ஜி எஃப் 2. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் மூன்றாவது பாகமும் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் எத்தனை கோடி பேர் பார்த்துள்ளனர் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் ஒட்டு மொத்தமாக சுமார் 5 கோடி பேர் பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது.இதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.