சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரேகா தற்பொழுது தன்னுடைய ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் இதனைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர் ஏனென்றால் பாத்ரூமே வீடு போல மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
80 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேகா. இவர் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமான நிலையில் அதன் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
பிறகு வயதான காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகியவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவரால் தொடர்ந்து அந்த வீட்டில் இருக்க முடியவில்லை ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் ஷோக்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கிறார் அதில் தொடர்ந்து தன்னுடைய அன்றாட வாழ்க்கையின் நடக்கும் அனைத்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் UKவில் அவரது சகோதரியின் தோழி வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவருடைய வீட்டை பார்த்துவிட்டு மிகவும் அழகாக இருந்த காரணத்தினால் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோவையும் இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட இதனை பார்த்த ரசிகர்கள் வீட்டின் பாத்ரூம்லையே படுத்து தூங்கலாம் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.