விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு படாத பாடுபட்டு வந்த நிலையில் மேலும் அவருடைய தலையில் இடியை இறக்கியுள்ளார் ராதிகா.
அதாவது கோபி தொடர்ந்து குடித்து வந்ததால் ஈஸ்வரி கோபியை தன்னுடைய வீட்டிற்கு வந்து விட வேண்டும் எனவும் பழைய படி வாழலாம் கூறுகிறார். எனவே இந்த நேரத்தில் கோபி குடித்துவிட்டு கார் எது என தெரியாமல் தேடிக் கொண்டிருந்த நிலையில் செழியன் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
எனவே கோபி இதற்கு மேல் வீட்டிற்கு வர மாட்டாரோ என்று பயத்தில் ராதிகாவும் கோபியின் வீட்டிற்கு பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். இவ்வாறு அனைவரும் இவரை எதிர்த்தும் முடியாது என கோபியுடன் இங்கு தான் வாழ வேண்டும் என்ற முடிவில் அங்கேயே தங்கியுள்ளார்.
மேலும் ஈஸ்வரி உன்னை இந்த வீட்டிலிருந்து சீக்கிரத்தில் துரத்திவிட்டு கோபியை இந்த வீட்டிலேயே இருக்க வைக்கிறேன் என சவால் விட அதே போல் ராதிகாவும் பாக்யாவை இந்த வீட்டிலிருந்து துரத்திவிட்டு நீதான் என்னுடைய மருமகள் என உங்கள் வாயால் சொல்ல வைக்கிறேன் என சபதம் போட்டுக் கொண்டனர்.
இவ்வாறு இவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க பிறகு கோபி மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் அங்கு தன்னுடைய நண்பருடன் குடித்துக் கொண்டிருக்க என்னுடைய நிம்மதியே போயிடுச்சு என புலம்புகிறார் அப்பொழுதுதான் இவருடைய நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபலம் மாற்றப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

அந்த வகையில் இதற்கு மேல் கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் சீரியல் மேலும் இன்னும் ஏராளமான சீரியல் நடித்து வந்த பிரபல நடிகர் பாக்கியலட்சுமி சீரியலிலும் இதற்கு மேல் நடிக்க இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.