நடிகர் பிரபுதேவாவின் இரு மகன்களை பார்த்துள்ளீர்களா.? இதோ அந்த புகைப்படம்.

prabhu deva

சினிமா உலகில் முதலில் நடன இயக்குனராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பின் ஒரு கட்டத்தில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஹீரோவாகநடிக்க ஆரம்பித்தார்.  ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த பிரபுதேவா தொடர் வெற்றிகளை கண்டு வந்ததால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சிறப்பாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென தனது ரூட்டை மாற்றி கொண்டார். ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் முதலில் ஹிந்தியில் சல்மான்கான் போன்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் பின் தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கியவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த நடிகர் பிரபுதேவா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான பொன்மானிக்கவேல், தேள் ஆகிய படம் சுமாரான வெற்றியை ருசித்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சினிமா உலகில் தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் பயணித்து ஓடிக் கொண்டிருக்கின்ற இவர் 1995ஆம் ஆண்டு ராம்லத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இருவரும் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின் நயன்தாராவை காதலித்து வந்தார் பிரபு தேவா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் விலகினர். ஒரு வழியாக நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் பிரபுதேவா டாக்டர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபு தேவாவிற்கு முதல் மனைவிக்கு பிறந்த மூன்று மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகன் விஷால் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் பிரபுதேவாவுக்கு தனது மகன்களான ரிஷி தேவா மற்றும் ஆதித் தேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

prabhu deva
prabhu deva