காக்கா, கழுகு கதை தெரியும்.. ரஜினி சொன்ன தக்காளி கதை கேட்டு இருக்கீங்களா.! வியந்து போன ரசிகர்கள்

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வயதிலேயும் படம் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்த நிலையில் அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தீபாவளி முன்னிட்டு அந்த படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது. அதனை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய வரும் தலைவர் 170 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

18 வயதிலேயே பல கோடிக்கு அதிபதியாக இருக்கும் தெய்வத்திருமகள் குழந்தை நட்சத்திரம் சாரா..? முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ண ரஜினி திட்டமிட்டு இருக்கிறார் இப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது காக்கா, கழுகு கதையை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இதே போல தக்காளி கதை ஒன்றையும் ரஜினி சொல்லியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

குசேலன் படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது அந்த படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்த ஒருவரை ரஜினி தொடர்ந்து கவனித்து வந்தார் அவர் இன்னொரு அசிஸ்டன்ட் டைரக்டரின் வேலையை காப்பி அடித்து அதைப் போலவே செய்து வந்தார் ஒரு கட்டத்தில் ரஜினி அந்த நபரை அழைத்து ஒரு குட்டி கதை சொன்னாராம்.

அஜித், சூர்யா, தனுஷுக்கு அடிச்சு தூக்கும் நம்பர்..! விஜய், ஜெயம் ரவி, விஷால், ஆர்யாவுக்கு ஏழரையாக அமைந்த நம்பர்.!

ஒரு ஊரில் தக்காளி விற்கும் வியாபாரி இருந்தாராம் அவர் தனது தக்காளியை ராஜாவிடம் கொண்டு சென்றுள்ளார் உடனே ராஜா அந்த தக்காளி வியாபாரியிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு வியாபாரி விலைமதிக்க முடியாத பொருளை தாருங்கள் என கேட்டுள்ளார். உடனே  1000 மூட்டை பொற்காசுகளை பரிசாக கொடுத்தார்.

அதைப் பார்த்த மற்றொரு வியாபாரி தனது பூண்டை மன்னரிடம் காண்பித்திருக்கிறார். பிடித்து போக உனக்கு என்ன பரிசு வேண்டும் என கேட்டுள்ளார் அவரும் எனக்கு விலைமதிக்க முடியாத பொருளை தாருங்கள் என கூற உடனே 1000 மூட்டை தக்காளியை பரிசாக கொடுத்தாராம். இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது. மற்ற உதவி இயக்குனர்களை காப்பியடிக்காதே புதிதாக யோசி என அறிவுரை கூறினாராம்.