நடிகர் நாகேஷ் உடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கவுண்டமணி.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

Nagesh : நடிகர் நாகேஷ் உடன் பிரபல முன்னணி நடிகர் சிறிய வேடத்தில் அப்பொழுதே நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஏவிஎஸ் நிறுவனம் ஏராளமான முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சர்வர் சுந்தரம்.

காமெடியனாக கலக்கி வந்த நாகேஷ் சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் முத்துராமன், கே.ஆர் விஜயா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இப்படம் தனக்கு அழகில்லை என்று நினைத்துக் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவன் சினிமாவில் எப்படி சாதித்தான் என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

ராமராஜன் இயக்குனராக ஹிட் கொடுத்த படங்கள் இத்தனையா.? லிஸ்ட் பெருசா போகுது

சர்வர் சுந்தரம் படத்திற்கு கே. பாலச்சந்தர் திரைக்கதை அமைக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த நிலையில் டி.எம் சௌந்தர்ராஜன் பாடினார். இந்நிலையில் சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் உடன் இணைந்து நடிகர் கவுண்டமணி ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார்.

Nagesh
Nagesh

தனது இளமை வயதிலேயே இவர் திரைப்படத்தில் நடித்திருக்கும் இந்த காட்சிக்கான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வரும் கவுண்டமணி வயதான காரணத்தினால் சமீப காலங்களாக நடிக்கவில்லை என்றாலும் இவர் நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஜயகாந்த் மறைவிற்கே போகல.. கலைஞர் 100 விழாக்கு போன அவ்வளவுதான் என வர மறுத்த நடிகர்கள்..!

இவ்வாறு நடிகர் கவுண்டமணி கடைசியாக கேப்டனின் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் வந்தார். தன்னால் நடக்க முடியவில்லை என்றாலும் கேப்டனை பார்க்க வேண்டும் என நேரில் பார்க்க வந்த கவுண்டமணியை பலரும் பாராட்டினர்.

Nagesh
Nagesh