விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் தான்.
இவருடைய சிறந்த நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் இவரை திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலின் கதைப்படி கோபி தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணம் செய்து தன்னுடைய காதலியுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என நினைத்த நிலையில் ராதிகா சுத்தமாக கோபியை மதிக்காமல் இருந்து வருகிறார். தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்து விட்டோமோ என வருத்தப்படும் நிலைமைக்கு கோபி யோசித்து வருகிறார்.
இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் இருந்து திடீரென கோபி காபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறி சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

அதாவது இதற்கு மேல் கோபி கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான சஞ்சீவ் நடிக்க இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வந்த நிலையில் தற்போது இது வதந்தி என்றும் இது விளம்பர படத்திற்கான ஷூட்டிங் என்பது தெரிய வந்து இருக்கிறது. மேலும் தற்பொழுது புதிய விளம்பரம் ஒன்றில் ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்