தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட குட் நைட் பட நடிகை.! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Good night movie actress: பொதுவாக நடிகைகள் சினிமாவில் ஓரளவிற்கு பிரபலமடைந்த விட்டால் திடீரென திருமணம் செய்து கொள்வது கிடையாது ஏன் ஏராளமான நடிகைகள் திருமணம் செய்யாமல் இருந்து வருவதையும் பார்த்து வருகிறோம். அப்படி தற்பொழுது தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கான ஒரு இடத்தை பிடித்து இருக்கும் பிரபல நடிகை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அதற்கான நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் குட் நைட். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

தனுஷ் – சிவகார்த்திகேயன் நட்பு உடைந்தது.. எந்த படத்தில் தெரியுமா.? நீயே இப்படி செய்யலாமா..

குட் நைட் படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க இவருக்கு மீரா ரகுநாத் நடித்திருந்தார். மேலும் ரமேஷ் திலக் முக்கிய கேரக்டரின் நடித்திருந்த நிலையில் இப்படத்தினை விநாயகர் சந்திரசேகரன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மீதா இதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குட் நைட் திரைப்படம் தான் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருக்கும் நிலையில் திடீரென நடிகை மீதா திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆமாம், அதாவது முதல் நீ முடிவும் நீ படத்தின் வெற்றிக்கு பிறகு குட் நைட் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் மீதாவிற்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Good night movie actress
Good night movie actress

இவருடைய வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Good night movie actress
Good night movie actress