சினிமா உலகில் கட்டுமஸ்தான இருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதும் நல்லதொரு வரவேற்பு உண்டு. அப்படி சினிமா உலகில் அண்ணன், நண்பன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை ஏற்று தனது திறமையை வெளி காட்ட தொடங்கினார்.
அந்த வகையில் இவர் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் மேலும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இதன் மூலம் அவர் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.
தற்பொழுது வரையிலும் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஆர்யா சமீபகாலமாக சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத்தால் தற்போது அவர் வெற்றிக்காக முயற்சித்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த கஜினிகாந்த் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.
தற்போது அவரும் வெற்றிக்காகப் போராடி கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சுந்தர் சியுடன் இணைந்து அரண்மனை 3 மற்றும் பா ரஞ்சித் உடன் இணைந்து சல்பேட்டா போன்ற அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக சல்பேட்டா படத்திற்காக உடலை காட்டுத்தனமாக முறுக்கேற்றி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது 150 கிலோ எடையை தூக்கி ஒர்க் அவுட் செய்து வருகிறார். இதோ அந்த வீடியோ.
Getting ready for the final showdown with @KalaiActor @Actorsanthosh @johnkokken1 and @shabzkal ?? 150 kgs full squat ??Trust in ur trainer #jai with heavy weights ? #paRanjithFilm @beemji #Arya30 @K9Studioz @Music_Santhosh pic.twitter.com/S4ApySBM8x
— Arya (@arya_offl) September 24, 2020