இந்த போட்டியாளரை காப்பாற்ற தான் விசித்ராவை எலிமினேஷன் செய்தீர்களா.? பிக் பாஸ் ஐ கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இந்த ஏழாவது சீசன் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருந்தது அது மட்டும் இல்லாமல் இறுதி கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதால் பல ரசிகர்கள் யார் வின் பண்ண போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

ஏற்கனவே சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் ஆனால்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர் இந்த நிலையில் கடைசி வரை சென்று வின் பண்ண வில்லை என்றால் என்ன செய்வது என யோசித்து 16 லட்சம் பணத்துடன் வெளியேறினார்.

2023 – ல் நடிகர்களை ஓவர் டேக் செய்து நடிப்பில் பின்னி பெடலெடுத்த டாப் 3  வில்லன் நடிகர்கள்.! சாரே உங்க நடிப்பு பிரமாதம்

அப்படி இருக்கும் நிலையில் மீதமுள்ள ஏழு போட்டியாளர்கள் தற்பொழுது வீட்டிற்குள் இருந்து வருகிறார்கள் இதில் மாயா அல்லது விஜய் தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என பிரைவேட் ஓட்டுகள் லிஸ்ட் வெளியானது. ஆனால் அதற்கு நேர் எதிர்மறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்திரா தான் வெளியே சென்றுள்ளார்.

வீட்டை விட்டு வெளியே வந்த விசித்திரா பேட்டி கொடுத்து வருகிறார் விசித்திரா வெளியே சென்றதால் பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் அதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் அடுத்ததாக மாயா அல்லது விஜய் தான் வெளியே செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர் எதிராக நடந்துள்ளதால் எங்களை எல்லாம் முட்டாளாக நினைக்கிறீர்களா என பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்க விடுகிறார்கள்.

அரை கிழவன் ஆனாலும் சினிமாவில் ஜொலிக்கும் 5 நடிகர்கள்.! அட இவருக்கு 50 வயசுன்னு சொன்னா எவன் நம்புவான்..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயதான நபர்கள் இவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பது மிகவும் கடினம் ஆனால் விசித்ரா கடைசி வரை இருப்பார் என்றும் வெற்றி பெறுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் திடீரென அவரை வெளியே அனுப்பியதால் தான் ரசிகர்கள் கோபப்பட்டு தங்களுடைய ஆதங்கத்தை கொட்டித் இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இது நியாயமே கிடையாது ஏதோ ஒரு முக்கிய போட்டியாளர்களை காப்பாற்றுவதற்காக தான் இப்படி ஒரு கேவலமான வேலையை செய்துள்ளார்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவை வெளியிட்டு வருகிறார்கள்.