எதிர்நீச்சல் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவை விட அதிக சம்பளம் வாங்குகிறாரா வேலா ராமமூர்த்தி.? காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுகிறாரே..

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மாரிமுத்து இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் குணசத்திர வேடத்தில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் ஜெயிலர்  திரைப்படத்தில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அது மட்டும் இல்லாமல் இவருக்கு இந்த சீரியல் மூலம் பேரும் புகழும் கிடைத்தது.

ஆனால் திடீரென எதிர்பாராதவிதமாக மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார். அதேபோல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்ததாக யாரை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது ரசிகர்கள் பலரும் வேலராமமூர்த்தி எனக் கூறி வந்தார்கள் உடனே சீரியல் அவரை அணுகினார்கள் ஆனால் வேலா ராமமூர்த்தி படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் இப்போது தன்னால் முடியாது எனக் கூறிவிட்டார்.

BIGGBOSS 7 : இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.. தப்பிய நிக்சன்.. அறிவித்த விஜய் டிவி

ஆனாலும் சன் பிக்சர்ஸ் வேலா ராமமூர்த்தியை  விடுவது போல் தெரிவதில்லை. வேல ராமமூர்த்தி சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர். அது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார் வேல ராமமூர்த்தி. ஆனால் திடீரென எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார் படத்தில் இவர் என்னதான் படத்தில் நடித்தாலும் பெரிதாக இவருக்கு சம்பளம் கிடைக்காது.

ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு மாதத்திற்கு பத்திலிருந்து இருபது லட்சம் வரை சம்பளமாக சீரியல் குழு கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்புஆதி குணசேகராக நடித்த மாரிமுத்துவுக்கு ஒரு எபிசோட்க்கு  20 ஆயிரம் ரூபாயாக கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அவரை விட அதிக சம்பளம் வேலராமமூர்த்தி வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! ஆன்ட்டி ஆனதால் இப்படி ஒரு முடிவா?

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் மாரிமுத்து இறந்த பிறகு வேல ராம மூர்த்தியை சீரியல் குழுவே அணுகியதால் இதுதான் சான்ஸ் என வேலராமமூர்த்தி சம்பள விஷயத்தில் கெடுபடியாக இருந்து பேரம் பேசி உள்ளார். அதனால்தான் வேல ராம மூர்த்திக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.