BIGGBOSS 7 : இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.. தப்பிய நிக்சன்.. அறிவித்த விஜய் டிவி

Bigg Boss 7 Promo : விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றன.. இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஏழாவது சீசன் தொடங்கி தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன..

இந்த வாரம் மக்களின் எண்டர்டெயின்மெண்டுக்காக பிக் பாஸ் பல்வேறு டாஸ்குகளை கொடுத்துள்ளனர். அதில் சமீபத்திய எபிசோடுகளில் பொம்மலாட்டம் டாஸ்க் நடைபெற்றது அதில் சிலர் குழந்தைகளாகவும் சிலர் பொம்மைகளாகவும் மாறி என்டர்டைன்மென்ட் செய்தனர்.. மேலும் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீடு கலைக்கல்லூரி ஆக மாறி உள்ளது.

தியேட்டர் கிழிய போகுது.. தளபதி 68 படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா.? குஷியில் ரசிகர்கள்

சிலர் பேராசிரியர்களாகவும் சிலர் மாணவர்களாகவும் என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.. இந்த வாரம் எவிக்சன் ப்ராசஸ் இருக்கு நிக்சன், தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, மணிச்சந்திரா போன்றோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.. அதில் குறைந்த ஓட்டுகளில் மணி சந்திரா மற்றும் நிக்சன் தான்  டேஞ்சர் சோனில் இருக்கின்றனர்.

இவர்களில் நிக்சன் வெளியேற தான் அதிக வாய்ப்பு இருக்கிறது ஆனால் தற்பொழுது மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சிக்னல் இல்லாமல் கரண்ட் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இதனை கருத்தில் கொண்டு விஜய் டிவி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளது.. இந்த வாரம் மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதால் இந்த வார எலிமினேஷனை ரத்து செய்துள்ளனர்..

2023-ல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 5 பாடல்கள்.! மாதங்கள் கடந்தும் குறையாத வைப்

அதனால் சிலர் சோசியல் மீடியா பக்கத்தில் இதேபோல்தான் இரண்டாவது வாரத்தில் மாயா வெளியேற இருந்தார் ஆனால் அப்பொழுது நோ எவிக்ஷனால் மாயா தப்பித்து விட்டார்.. அதேபோல் இந்த பத்தாவது வார எபிக்ஷனில் நிக்சன் தப்பித்து விட்டார் என கமெண்ட் எழுப்பி வருகின்றனர்.