சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் என்ற சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் ஆதிராவுக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்துவிட்டார் குணசேகரன். இதனால் ஆதிரை மிகுந்த கோவத்தில் இருக்கிறார்.
இந்த திருமணம் நடைபெற்றதால் அனைவரும் குணசேகரன் மீது கோபத்தில் இருக்கிறார்கள் இந்த சமயத்தில் மருமகள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் குணசேகரன் அந்த நேரம் பார்த்து வக்கீல் வந்து உங்க மருமகளுக்கும் இந்த சொத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக கூற உடனே உங்களுடைய மருமகள்கள் எங்கே என கேட்கிறார் வக்கீல்.
அட என்ன சார் சொல்ல மாட்டீங்களா இப்பதான் எல்லாத்தையும் வீட்டை விட்டு துரத்துன என கூற வக்கீல் அவர்கள் உடனடியாக வரவேண்டும் என கூறுகிறார் அவ்வளவு சீக்கிரம் எல்லாம் கூப்பிட முடியாது என் கெத்து குறைந்துவிடும் நான் கூப்பிட்டு விட்டு உங்களுக்கு சொல்லி அனுப்புறேன் என கூறி விடுகிறார் உடனே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் புள்ளைய வர சொல்லு என ஜனனி மற்றும் ஜனனியின் கணவரையும் வர சொல்கிறார் குணசேகரன்.
இப்படி திடீரென குணசேகரன் இவ்வாறு சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இப்பொழுது என்ன பண்ண போகிறார் என அனைவரும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சமயத்தில் ஜனனி ஆதிரை என அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள் தற்பொழுது இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக வைரல் ஆகி வருகிறது
இந்தப் பிரம்மா வீடியோவில் ஆதிரை ஜனனி மற்றும் பலர் வீட்டிற்கு வருகிறார்கள் உடனே குணசேகரன் கோபப்பட்டு ஆரத்தி எடுக்க வேண்டும் எதுக்காக உள்ள வரீங்க ஆரத்தி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கேன்ல என நீங்க எதை தான் முறையா செஞ்சிருக்கீங்க இதை மட்டும் முறையா செய்ய போறீங்களா என கவுண்டர் அடிக்கிறார்கள் இதனால் குணசேகரன் கோபப்படுகிறார்.
அடுத்த காட்சியில் குழந்தையை எப்படி வளர்க்கணும்னு தெரியல எனக் குணசேகரன் திட்டிக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் குழந்தை மத்தவங்களை எப்படி நடத்தக்கூடாதுன்னு உங்ககிட்ட தான் கத்துக்கிட்டேன் பெரியப்பா என அந்த குழந்தை குணசேகரன் மூஞ்சியில் எடுத்தது போல் கூறுகிறது இதனால் குணசேகரன் முகம் வாடுகிறது இத்துடன் இந்த பிரம்மா வீடியோ முடிகிறது.