சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் எதிர்நீச்சல், இந்த சீரியல் அனைவரும் எதிர்பார்த்தது போல் பல திருப்பங்கள் நடைபெற தொடங்கிவிட்டன. அப்பத்தா இனி எந்த முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் திடீரென பல டிவிஸ்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் அப்பாவிடம் கையெழுத்து வாங்கியது செல்லாது 40% ஷேர் குணசேகரனுக்கு வராது என ஜனனி கூறியதை தொடர்ந்து திடீரென வில்லத்தனமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார் குணசேகரன்.
இந்த நிலையில் மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் அப்பத்தாவை ஆள் வைத்து வேற ஹாஸ்பிடலுக்கு மாற்றுவது போல் நாடகமாடி அப்பத்தாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். ஒரு பக்கம் ஜனனி பணத்திற்காக திண்டாடிக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் அப்பத்தா எங்கே போயிருக்கிறார் என்பது தெரியாமல் அடுத்த பிரச்சனையில் சிக்கிக் கொண்டு வருகிறார்.
கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா முதன்முறையாக ஜீவானந்தன் என்ற பெயரை கூறியுள்ளார் யார் அந்த ஜீவானந்தம் இந்தக் கேள்வி ஜனனியிடம் பதில் கிடையாது அதனால் ஜனனி கண்டுபிடிப்பாரா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அதேபோல் ஜீவானந்தம் யார் என்பதை கண்டுபிடித்து நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறாரா அல்லது அப்பத்தாவை கண்டுபிடித்து குணசேகரனை பழிவாங்க இருக்கிறாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இந்த நிலையில் குணசேகரன் அப்பதாவை கடத்திக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் அது மட்டும் இல்லாமல் ஒரு நர்ஸ் ஒருவரிடம் அப்பத்தாவை கவனித்துக் கொள்ளும்படி கூறுகிறார். அதற்கு அந்த நர்ஸ் நான் அப்பத்தாவை நல்லாவே கவனித்துக் கொள்கிறேன் எனக்கு பணக்கஷ்டம் இருக்கிறது உண்மைதான் ஆனாலும் அதெல்லாம் விட்டுட்டு தான் நான் கவனிக்கிறேன் எனக் கூற எனக்கு எல்லாம் புரியுது நான் அதைவிட அதிகமாகவே தரேன் நல்லா பாத்துக்கோ எனக்கு கூறுகிறார்.
ரொம்பல்லாம் நல்லா பாத்துக்க தேவை இல்ல நல்லா பாத்துக்கிட்டா போதும் என குணசேகரன் கூறுகிறார். அப்பத்தாவை கடத்தி சென்று என்ன செய்யப் போகிறார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.