எதிர்நீச்சல் குணசேகரனின் தாய் மாமா இத்தனை சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளாரா? ஐந்து படமும் செம ஹிட்.

பொதுவாகவே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வருவதையே விரும்புவார்கள் இளம் நடிகர் நடிகைகள். ஆனால் முற்றிலும் மாறாக வேறு வழி இல்லாமல் வயதான நடிகர் நடிகைகள் வயது முதிர்ச்சி காரணமாக வெள்ளி திரையிலிருந்து  மீண்டும் அம்மா அப்பா தாத்தா பாட்டி என ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சின்னத்திரைக்கு வருவார்கள்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இருந்து விட்டார். இவரும் வெள்ளித்திரையில்  துணை இயக்குனராகவும்  நடிகராகவும் இருந்தவர். இவரைப் போன்றே இந்த சீரியலில் குணசேகரனுக்கு தாய் மாமனாக பூசாரி கேரக்டரில் நடிக்கும் பாரதி கண்ணன் இதற்கு முன் வெள்ளி திரையில் ஐந்து திரைப்படங்களை இயக்கியுள்ளாராம். இவர் இயக்கிய அந்த ஐந்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த ஐந்து திரைப்படங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.

தமிழைப் போட்டு தள்ளி அந்த பழியை தூக்கி மேக்னா மீது போட போகும் அர்ஜுன் மற்றும் கலிவரதன்.! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

கண்ணாத்தாள்- 1998 ஆம் ஆண்டு  மீனா மற்றும் கிரண் நடிப்பில் உருவான சாமி திரைப்படம். இந்த படம் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல்  தொலைக்காட்சியில் இன்றளவும் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி – பிரபு, ரோஜா நடிப்பில் ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் உருவானது இந்த திரைப்படம். இது கிராம பின்னணி கதையை கொண்டு பெரிய மனிதன் என்றால் வாக்கு மாற மாட்டான் என்ற கதைகளத்துடன்  சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி- ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்த திரைப்படம். அம்மனாக ரம்யா கிருஷ்ணன் இந்த திரைப்படத்தில் காணக் கச்சிதமாக நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் ராம்கி சங்கவி பானுப்பிரியா வடிவேலு நிழல்கள் ரவி போன்ற பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படமும் இன்றளவும்  ரசிகர்களால் பெரிய அளவில் விரும்பி பார்க்க முடிகிறது.

குட்டி போட்ட பூனை மாதிரி மகா பின்னாடியே அலையும் சூர்யா.! கேசரியில் உப்பை அள்ளிபோட்ட சூர்யா… நடக்கபோவது என்ன..

ஸ்ரீ பண்ணாரி அம்மன் – இந்த திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தி, கரண், லயா, வைகைப்புயல் வடிவேல் போன்றோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே தெய்வீக படங்களுக்கு நிறைய வரவேற்பு இருந்ததால் இந்த படத்தையும் தெய்வீக படமாகவே எடுத்தார். மேலும் இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

வயசு பசங்க- ஒரே மாதிரி கதை காலங்களைக் கொண்ட படத்தை கொடுத்தல்  ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடும் என்பதற்காகவும் இளம் தலைமுறை யினரை கருத்தில் கொண்டு காதல் கதை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இது. இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அப்போதே இந்த திரைப்படம் நிறைய சர்ச்சைகளை சந்தித்தது. அந்த அளவுக்கு சென்சார் அதிகமாக இருந்ததால் இந்த திரைப்படத்திற்கு சென்சார் போர்டு  ஏ போர்டு கொடுத்தது. இப்படி பல சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தது எதிர்நீச்சல்  பூசாரி பாரதி கண்ணன் தானா என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது.