சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆதிரையின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதாவது அருண் ஆதிரைக்கு திருமணத்தை நடத்தி வைக்க ஜனனி முயற்சி செய்து வந்த நிலையில் அதே நேரத்தில் குணசேகரன் ஆதிரை கரிகாலனுக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தார்.
எனவே ஆதிரைக்கு யாருடன் தான் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆதிரை இருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டு குணசேகரன் தனது குடும்பத்தினருடன் வந்து நடுரோட்டில் அதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதன் பிறகு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கும் சென்று திருமணத்தையும் ரிஜிஸ்டர் செய்திருக்கும் நிலையில் ஆதிரையை ஜான்சி ராணி கரிகாலன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.
ஞானத்திற்கு ஆதிரையை இந்த வீட்டில் விடுவது சுத்தமாக பிடிக்கவில்லை எனவே குணசேகரனிடம் ஏதோ பண்ணுங்க என கூறிவிடுகிறார் பிறகு இவர்கள் ஆதிரையை இதுதான் உன்னுடைய புகுந்த வீடு எங்கு தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டு வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் ஜனனிடம் நீ இதுல தோத்துட்ட என சொல்ல இல்லை நீங்கதான் தோத்துட்டீங்க என கூறுகிறார்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கதிர் ஜனனியை அடிக்க செல்ல சக்தி கதிரை பளார் என அறைந்து விடுகிறார் என்னுடைய பொண்டாட்டி மேல யாராச்சும் கைய வச்சிங்கனா நான் அடிப்பேன் என பேச குணசேகரன் கதிர் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இவ்வாறு இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் அனைவரையும் எம்மா ஏய் சைவம் சைவம் ரெண்டுத்துலையும் எத்தனை வகை இருக்கோ அத்தனை வகையையும் சமச்சிடு என சொல்ல அதற்கு நந்தினி என்ன மாமா யாராச்சும் விஐபி வராங்களா என கேட்கிறார்.
கரிகாலன் மாப்பிள்ளை விருந்துக்கு வராமா இத்தனை நாளா அவ வேற யாரோ ஒருத்தன் இப்ப இந்த வீட்டு மாப்பிள்ளை என சொல்ல குணசேகரன் மனைவி நான் சைவ சாப்பாடை பார்த்திருப்பதாக கூற ரேணுகா நான் அசைவத்தை பார்த்துகிறேன் என்று சொல்கிறார். பிறகு நந்தி இரண்டையும் நான் பார்த்துகிறேன் என சொல்ல ஜனனி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஸ்பெஷஸலாக மாப்பிள்ளை விருந்து ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்துள்ளார்.