இந்தியாவில் வருடம் வருடம் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் 16 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில் பல இந்திய வீரர்கள் 500 உங்களுக்கு மேல் அடித்து அசத்தி உள்ளனர். குறிப்பாக சுப்மன் கில் 16 போட்டிகளில் 851 ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
இவருடைய ஆட்டம் தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது இதற்கு முன்பாக நடந்த சர்வதேச போட்டிகளில் கூட இரட்டைச் சதம் மற்றும் பல சதங்கள் அடித்து அசத்தியுள்ளார் இவருடைய பேட்டிங் சிறப்பாக இருப்பாதால் சச்சின், வீராட் கோலிக்கு அடுத்து இவரை சேர்த்து விடலாம் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கபில் தேவ் வளர்ந்து வரும் சுமன் கில் பற்றி பேசியது.. சுனில் கவாஸ்கர், சச்சினை தொடர்ந்து சேவாக், ட்ராவிட், லட்சுமணன் வந்தார்கள் அவரை தொடர்ந்து விராட் கோலி வந்தார் இப்பொழுது சுப்மன் கில் தனது பேட்டிங் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அவர் வந்து குறைந்த காலங்களே ஆகிறது.
அவருக்கு திறமை இருந்தாலும் அடுத்தடுத்த சீசன்களில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.. அதற்குள் பெரிய பட்டியலில் சேர்ந்து பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அவருக்கு இளம் வயதிலேயே அழுத்தம் கொடுக்க வேண்டாம்.. வந்து வீச்சாளர்கள் இவருடைய டெக்னிக்கை பார்த்து அவருடைய பலம், பலவீனம்..
என்ன என்பதை தெரிந்து கொள்ள இரண்டு, மூன்று காலங்களாகும்.. அதுவரை அவருடைய செயல்பாட்டை நாம் கண்காணிக்க வேண்டும். பிறகும் அவருடைய ஆசாதாரணமான பேட்டிங் திறமை வெளிப்படுத்தும் பட்சத்தில் சுப்மன் கில் நாம் சேர்த்துவிடலாம் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுதீ போல பரவி வருகிறது.