சொத்து மதிப்பு விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஓரம்கட்டிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? அசர வைக்கும் தகவல்.

rajini-and-rahman
rajini-and-rahman

ஒரு படம் ஹிட் அடிக்க என்ன தான் ஹீரோ, ஹீரோயின், காமெடியன்கள் குணச்சித்திர கதாபாத்திர நடிப்பவர்கள் என அனைவரும் இருந்தாலும் அந்தப் படத்தை வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் சென்று காட்டுவதற்கு மிக முக்கிய அம்சமாக இருப்பது இசை தான்.

பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான் ஒரு படத்தை எந்த ஒரு லெவெலுக்கு வேண்டுமானாலும் எடுத்துச் சொல்ல முடியும் அதை சிறப்பான முறையில் பல வருடங்களாக கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் ஏ ஆர் ரகுமான்.

இவரது இசை இந்தியாவையும் தாண்டி உலக நாடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த காரணத்தினால் தான் இவர் தவிர்க்கமுடியாத ஒரு நாயகனாக சினிமா உலகில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்கார் போன்ற பிரபல விருதுகளை தன்வசப்படுத்தி செம மாஸ் கட்டி வருகிறார்.

ஏ ஆர் ரஹ்மான் தற்போது கூட பல்வேறு டாப் நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து ஓடிக் கொண்டிருக்கிறார். இருக்கின்ற நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் சொத்து மதிப்பை பற்றி தான் நாம் முழு விலாவாரியாக பார்க்க இருக்கிறோம். அவரின் முழு சொத்து மதிப்பு கிட்டத்தட்ட சுமார் 595 கோடி இருக்கும் என தெரியவருகிறது.

மேலும் அவரது ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் 50 கோடி என சொல்லப்படுகிறது இதுவரை அவரது கையில் ஜாகுவார் உள்பட பல விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. மேலும் ஆர் ரகுமான் சென்னை, மும்பை, மகாராஷ்டிரா என பல முக்கிய இடங்களில் விலை உயர்ந்த ஆடம்பர வீடுகளையும் தன்வசப்படுத்தி கூறுகிறார். மேலும் ஆர் ரகுமானின் சொத்து ரஜினியின் சொத்து மதிப்பை விட அதிகம் என கூறப்படுகிறது.