2014 முதல் 2023 வரை பொங்கல் ரிலீஸில் ஜெயித்தது யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ

சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் குறிப்பாக பொங்கல், தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் டாப் ஹீரோகளின் படங்கள் மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அயலான், கேப்டன் மில்லர் என பல படங்கள் அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் என்ன என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

2014 :  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் வீரம் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து  தமன்னா, விதார்த், சந்தானம், தம்பி ராமையா, நாசர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது அப்பொழுது படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.! முதன் முறையாக தமிழை திருப்பி அடித்த அர்ஜுன்.! இனி எழுந்திரிக்கவே முடியாது போல..

2015 : பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் உருவான திரைப்படம் ஐ.. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வெளிவந்து அதை பூர்த்தி செய்தது வசூல் ரீதியாக ஹிட் அடித்தது.

2016 : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ரஜினிமுருகன் படம் காமெடி கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

2019 : மீண்டும் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து அஜித் நடித்த திரைப்படம் விசுவாசம் இந்த படம் முழுக்க முழுக்க அப்பா, மகள் பாசத்தை எடுத்து காட்டும்.. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

எம்ஜிஆருக்கு பிடித்த விஜயகாந்த் படம்.. அட இதுவா.?

2020 :  தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் பட்டாஸ் படத்தில் நல்ல மெசேஜ் இருந்தது மேலும் சினேகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது மொத்தத்தில் படம் வெற்றி பெற்றது.

2021 : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர் படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

2023 : அஜித்  நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் துணிவு முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளியே எடுத்துக்காட்டியது இதனால் படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக ஹிட் அடித்தது.