இன்று எட்டாத உயரத்தில் இருக்கும் அட்லீ.. சிடியை தூக்கிக்கிட்டு அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா.?

Atlee : தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத இயக்குனர் அட்லீ. முதலில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா போன்ற நடிகர் நடிகைகளை வைத்து ராஜா ராணி என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் காமெடி எமோஷனல் என இருந்ததால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து டாப் ஹீரோக்களும் இவரிடம் கதை கேட்க ஆரம்பித்தனர் அப்படி விஜயை வைத்து தெறி, பிகில், மெர்சல் என ஹாட்ரிக் வெற்றி படத்தை அட்லீ கொடுத்தார். அடுத்து தமிழில் டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாலிவுட் பக்கம் திசை திரும்பி ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை எடுத்தார்.

4.85 கோடி பட்ஜெட்டில் உருவான பருத்திவீரன் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்த படம் வெளிவந்து 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய ஹிட் அடித்தது. தற்பொழுது டாப் ஹீரோக்களுக்கு கதை சொல்லி படங்களை எடுத்து வருகிறார் இந்த நிலையில் அட்லீ சினிமாவில் நுழைவதற்கு முன் பட்ட கஷ்டங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அட்லியின் அப்பா டிப்லோமோ இன்ஜினியர் அதனால் அவர் அட்லீயை எப்படியும் இன்ஜினியர் படிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தாராம் ஆனால் அட்லிக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்பது சிறுவயதில் இருந்து ஆசையாய் இருந்ததால் அப்பாவிடம் தெரிவித்துள்ளார் ஆனால் முதலில் அவரது அப்பா சம்மதிக்கவில்லை பிறகு ஓகே சொன்னாராம்.

கைமீறி போன பொருட்காட்சி காண்ட்ராக்டை மீண்டும் பாக்கியாவிற்கு வாங்கி தந்த பழனிச்சாமி. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

பலரும் சினிமாவில் உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என கூறினார்கள் ஆனால் அட்லீ முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. தான் இயக்கிய குறும்படங்களை சீடியாக எடுத்துக்கொண்டு பல இயக்குனர்களிடம் போட்டு காண்பித்துள்ளார் கடைசியில் ஏன் நாம் ஷங்கர் இடம் காட்டக்கூடாது என அவரது அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பிறகு அந்த வீடியோவை பார்த்த ஷங்கருக்கு ரொம்ப பிடித்து போக ஷங்கர் அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. அட்லீ முதலில் அதை நம்பவில்லை பிறகு அலுவலகத்திற்கு போன பிறகுதான் ஷங்கர் நம்மை உதவி இயக்குனராக ஓகே சொன்னது தெரிய வந்ததாம் இதனால் அட்லீ ரொம்ப சந்தோஷமடைந்தாராம்.