“அண்ணாத்த” படத்திற்காக நடிகை மீனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? குஷ்பூவை விட குறைந்த சம்பளமா.? ஏற்றுக்கொள்ள முடியாமல் குமுறும் ரசிகர்கள்.

annathaa
annathaa

90 காலகட்டங்களில் இருந்து சிறப்பான படங்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமடைந்த நடிகைகள் பலரும் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து வருகின்றனர் அந்த வகையில்  90 காலகட்டங்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் மீனா.  அழகு மற்றும் திறமையின் மூலம் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி அசத்தியவர்.

மீனா இதுவரை தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களுடன் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் பெரும்பாலும் சினிமா உலகில் நடிக்கவில்லை ஆனால் மாறுதலாக அவரது மகள் நைனிகா.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல்வேறு நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆகியுள்ளார் இப்படி இருந்த நிலையில் திடீரென ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக நடிகை மீனா கம்பேக் கொடுத்து  நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ரவுடி பேபி என்ற படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மீனா ரஜினியின் அண்ணாத்த  திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் இந்த படத்தில் அவர் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் உலா வருகிறது. அதன்படி பார்க்கையில் நடிகை மீனா இந்த திரைப்படத்திற்காக வெறும் 80 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளாராம்.

ஆனால் குஷ்பூவை விட இவரது சம்பளம் ரொம்ப கம்மியாம்  நடிகை குஷ்பு இந்த திரைப்படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இவர் 80 லட்சம் வாங்கியது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.