வசூல் மழையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி முன்னிட்டு கடந்த நவம்பர் 10ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது. இந்த படத்தை எதிர்த்து கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படம் மோதியது.

படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் சுமாரான வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று பல்வேறு இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது வசூலிலும் பட்டையை கிளப்புகிறதாக தகவல்கள் வெளி வருகின்றன.

சிகரெட் அடிப்பதில் சூப்பர் ஸ்டாரையே தூக்கி சாப்பிட்ட 5 நடிகைகள்..! நயன்தாராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பாபா செல்லதுரை, அரவிந்த், சத்யன், டாம் சைன் சாக்கோ, நிமிஷா சஜயன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் எப்படி கொண்டாடி வருகிறார்கள் அதேபோல திரையுலகினரான தயாரிப்பாளர், இயக்குனர்..

நடிகர்கள் இந்த படத்தை தொடர்ந்து பார்த்து பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் ரஜினியை படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி உள்ளதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் நின்று வெற்றிக்குறியை போட்டார்.

விதி மீறி பொருட்களை மறைத்து வைத்த ஏஜென்ட் டீம்.! தந்திரமாக கண்டுபிடித்த கேப்டன் தினேஷ்.. பலிக்காடான விசித்ரா

இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இத்துடன் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உலக அளவில் சுமார் 55 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இப்படியே வசூல் வேட்டை நடத்தும் ஆனால் நிச்சயம் 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.