அஜித்தின் ஃபேவரைட் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு படத்துக்கு எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.?

yuvan
yuvan

இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா தற்போது பல்வேறு டாப் நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக அவரது இசை இருந்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இளம் வயதிலேயே “அரவிந்தன்” என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

அதன்பிறகு இவர் துள்ளுவதோ இளமை, தீனா, செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, சண்டக்கோழி, பில்லா, மங்காத்த போன்ற படங்களுக்கு இசை அமைத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தால் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்தார் யுவன்சங்கர்ராஜா.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒரு படத்தில் புக் பண்ணுவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல ஏனென்றால் அந்த அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

தற்போது அஜித்துடன் இணைந்து “வலிமை” என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார் இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் யுவன் சங்கர் ராஜா ஒரு படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

யுவன் ஒரு படத்திற்கு சுமார் 2 கோடியில் இருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.