நடிகை பார்வதி நாயர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு கன்னட மொழியில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகுதான் தமிழில் முதன்முதலாக என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார் அதன்பிறகு உத்தமவில்லன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் அலம்பன என்ற தமிழ் திரைப்படத்திலும் 83 என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் அடிக்கடி புகைப்படத்தை விடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு தீபாவளியைக் கொண்டாடும் விதமாக மெல்லிய புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
